From Pastor’s Desk

October 2026

கர்த்தருக்குள் அன்பானவர்களே, இறைவன் இயேசுவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த மாதத்தின் 6ஆம் தேதி அன்று நாம் தூய தோமாவை நினைவு கூறுகிறோம். தூய தோமா அவர்கள் இயேசுவோடு மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்த போதிலும், உயிர்த்தெழுந்த இயேசுவையே நம்ப மறுத்தார்! ஆனால் கர்த்தரின் கிருபையால் அவரை தரிசிப்பதற்கு ஓர் தருணம் கிடைக்கப்பெற்று, கண்ணார கண்ட பின் ‘என் ஆண்டவரே, என் தேவனே‘ என மனந்திரும்புதலோடு விசுவாச அறிக்கை செய்தார். நாம் தோமாவைப் போல இயேசுவின் வல்லமையையும், அவரது உயிர்த்தெழுதலையும் சந்தேகியாமல் இருப்போமாக. தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க அவரால் கட்டளை பெற்றுள்ளோம்.

தூய தோமா அவர்கள், கி.பி. முதலாம் நூற்றாண்டில், இயேசுவின் அன்பை பகிர்ந்தளிக்க இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரளாவிற்கு வந்திறங்கினார். அங்கு நற்செய்தி ஊழியம் செய்த பின் தமிழகம் வந்தார். அவ்ஊழியத்தின் போது நமது மண்ணில், இரத்த சாட்சியாய் மரித்தார்.

அவர் மரித்து 2000 வருடங்கள் உருண்டோடி மறைந்து விட்டன. நமது ஆண்டவர் அருளிய அருட்பணியை அன்பினால் நமது தாய் மண்ணில் செய்து விட்டு, அப்பணியின் தொடர்ச்சியை நம்மை நம்பியே நம்பிக்கையுடன் தந்து விட்டு மறுமை அடைந்தார். அந்த அருட்பணி இன்று நம் கையில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசு அனுப்பிய, தோமா விட்டு சென்ற நற்செய்தி பணியின் தொடர்ச்சியை நாம் தொடர்ந்து செய்வோமாக. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

இறை மைந்தன் இயேசுவின் இறைசேவையில்,

அருள்திரு. ஜான் ஸ்டீஃபன்,                                                                                                                                                          சபை போதகர்,
தூய மத்தேயு தமிழ் ஆலயம்.

Pastorinfo